என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்"
- பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
- கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், அரசு பஸ்களில் டிக்கெட் காலியாகிவிடுவதால், ஆம்னி பஸ்களை நாடிச்செல்கிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படுகிறது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தாலும் கூட, அதையும் பொருட்படுத்தால் பல மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை வருவதால், ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடு என்று உயர்ந்துவிட்டது. குறிப்பாக, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பஸ்களின் கட்டணம் என்பது குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.4 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான்.
- அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ளது. பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வெளியூர் செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் சென்று திரும்ப போக்குவரத்துக்காக விரிவான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.
வருகிற 28-ந்தேதி (திங்கள்) முதல் 30-ந்தேதி (புதன்) வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 11 ஆயிரத்து 200 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
28 சிறப்பு ரெயில்களையும் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் ஆம்னி பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம்.
அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் எச்சரிக்கும். ஆனாலும் இந்த கட்டண உயர்வு பண்டிகை காலங்களில் தடுக்க முடியாததாகவே இருக்கிறது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் 'ரெட் பஸ்' என்ற இணைய தளம் வழியாகத்தான் பெரும்பாலும் முன்பதிவு செய்கிறார்கள்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்றைய கட்டணம் ரூ.585 முதல் ரூ.1,200 வரைதான். ஆனால் 29-ந்தேதி ரூ.2,110 முதல் ரூ.4,350 வரை. இதேபோல் கோவைக்கு ரூ.800 முதல் ரூ.1,040தான். ஆனால் 29-ந்தேதி ரூ.1,800 முதல் ரூ.3,470 வரை நிர்ணயித்துள்ளார்கள். இதே போல் தான் மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்பட அனைத்து நகரங்களுக்கும் வழக்கத்தைவிட 3 மடங்கு மேல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
இந்த கட்டண உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது பற்றி புக்கிங் ஏஜெண்ட் ஒருவர் கூறியதாவது:-
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் சொன்னாலும் பஸ் உரிமையாளர் தரப்பில் இணையதள நிறுவனத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி நழுவி விடுவார்கள். ஆனால், உண்மையில் இணைய தள நிறுவனத்துக்கு பஸ் உரிமையாளர்கள் கொடுப்பது 10 சதவீத கமிஷன் மட்டும்தான். எனவே ஆதாரத்துடன் கட்டண உயர்வை நிரூபித்து நடவடிக்கை எடுப்பது சிரமம் தான் என்றனர்.
டிக்கெட்டுக்கு அலைமோதுவது, கிடைத்தாலும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டியிருப்பது போன்ற சிரமங்களால் பொதுமக்களும் தங்கள் பயணத் திட்டங்கள் பற்றி மாற்றி யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
நண்பர்கள் சேர்ந்து வாடகைக்கு கார்களை அமர்த்தி ஊர்களுக்கு செல்வது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதுபற்றி டெம்போ வேன்கள் இயக்கும் ஒருவர் கூறியதாவது:-
இங்கிருந்து நாகர்கோவில் வரை செல்ல ரூ.30 ஆயிரம் தான் வாடகை. 14 பேர் பயணிக்கலாம். இவர்கள் ஆம்னி பஸ்களில் சென்றால் 40 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.
மேலும் ஊருக்கு சென்ற பிறகும் ஒரு நாள் வாடகை ரூ.2,400 கொடுத்தால் வேனை தங்கள் வசம் வைத்து கொண்டு அங்குள்ள இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும். பின்னர் பண்டிகை முடிந்து ஊர் திரும்பலாம். இந்த ஆண்டு ஏராளமான வேன்கள் முன்பதிவு செய்யப்படுகிறது என்றார்.
அதிலும் இப்போது 'ரெண்டல் கார்' வசதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது சாதாரண கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை கிடைக்கிறது. பயணம் செய்பவர்கள் எண்ணிக்கையை பொறுத்து எந்த ரக கார் வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ள முடியும்.
ஒரு நாள் வாடகை ரூ.1,800 முதல் ரூ.5 ஆயிரம் வரை கார்களை பொறுத்து வசூலிக்கிறார்கள். டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பணி செய்யும் நிறுவனத்தின் அடையாள அட்டை போன்ற மூன்று முக்கிய ஆவணங்களின் ஒரிஜினலை கொடுத்துவிட்டு காரை எடுத்து ஓட்டி செல்லலாம். இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கார் ஓட்ட தெரிந்தவர்கள் சொகுசான, வசதியான பயணத்துக்காக இந்த மாதிரி கார்களை முன்பதிவு செய்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு மட்டும் 500-க்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக இதை நடத்தும் தனியார் நிறுவனத்தினர் கூறினார்கள்.
- வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும்.
- சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர்.
சென்னை:
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
நேற்றும் இன்றும் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்து.
அரசு பஸ்கள் குறைந்த அளவிலான பயணிகளுடன் சென்றது. வார இறுதி நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) இல்லாத பிற நாட்களில் 800 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களை பொறுத்தவரையில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாக சென்னையில் இருந்து 800 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும்.
ஆனால் பயணிகள் இல்லாததால் 350 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார். அதே போல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு நேற்று குறைந்த அளவில்தான் ஆம்னி பஸ்கள் வந்தன.
வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும். நேற்று 200 பஸ்கள் மட்டுமே வந்தன.
சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர். பலர் முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்தனர். அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை மேற்கொண்டனர்.
- ஆம்னி பஸ்களில் ஒரு காலத்தில் குஷன் இருக்கைகள், புஷ் பேக் இருக்கைகள் தான் இருந்தன.
- இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்து இருக்கிறது.
இவ்வளவு பாதுகாப்பாக.... உற்சாகமாக... ஓடும் பஸ்சுக்குள்ளேயே உல்லாசமாக இருந்தபடியே பயணிப்பது தனி சுகம் தான் என்கிறார்கள் அந்த ஆசையுடன் செல்லும் ஆண்களும், ஆசையை தணிக்கும் அழகிகளும்...!
ஆம்னி பஸ்களுக்குள் இவ்வளவு சமாச்சாரம் நடக்குதா..? என்று ஆச்சரியமாகத்தான் நினைக்க தோன்றும்.
ஆம்னி பஸ்களில் ஒரு காலத்தில் குஷன் இருக்கைகள், புஷ் பேக் இருக்கைகள் தான் இருந்தன. இருந்தாலும் இரவு நேர பயணத்துக்கு படுக்கை வசதியை பயணிகள் விரும்பினார்கள். எனவே ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை தேடிவந்தார்கள்.
எனவே பஸ்களிலும் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தினார்கள். அதுவும் நட்சத்திர ஓட்டல்களை போல் இந்த படுக்கைகள் தனி அறைகள் போலவே சொகுசாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சுற்றிலும் திரைச்சீலைகள், சொகுசான மெத்தைகள், தனித்தனி டி.வி. வசதிகள், மெலிதாக மின்னும் இரவு விளக்குகள். தேவையில்லை என்றால் அனைத்தும் விடலாம். குளிர்சாதன வசதி வேறு.
இவ்வளவு சொகுசாக இருக்கும்போது துணையையும் தேடுவது இயற்கை தானே? ஆரம்பத்தில் காதலர்கள் சிலர் தங்களுக்கு இந்த வசதி ரொம்ப வசதியாகி விட்டதாக காதல் பயணத்தை தொடர்ந்தார்கள்.
அதுவும் ஏதோ ஒரு சில பஸ்களில் ஒன்றிரண்டு பேர் மட்டும் சென்றதால் பெரிய அளவில் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் இப்போது நடமாடும் நட்சத்திர விடுதிகள் போலவே இதை சொகுசு பஸ்கள் மாறிவிட்டன.
குறிப்பாக பெண் சுகம் தேடி செல்லும் ஆண்கள் இந்த மாதிரி பஸ்களை தங்களுக்கு பாதுகாப்பானதாக கருதுகிறார்கள்.
நகரில் ஏதாவது ஒரு ஓட்டல் அறை எடுத்து தங்கினாலும் வேலை முடிந்து வெளியே செல்லும் வரை திக்... திக்... என்று தான் இருக்கும். போலீஸ் சோதனை ஏதாவது நடந்தால் சிக்கி கொள்வோமே என்ற பயம் தான் அது.
ஆனால் இந்த மாதிரி பஸ் பயணத்தில் அந்த மாதிரி பயம் ஏதும் இல்லையாம். இரண்டு படுக்கைகளை ஏதாவது ஒரு நகரத்துக்கு முன்பதிவு செய்தால் போதும்.
சென்னையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கோவை செல்லும் பஸ்களில் இந்த உல்லாச பயணம் செய்பவர்கள் அதிக அளவில் பயணிப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட பஸ்...
விளக்குகள் அணைக்கப்பட்டதும் திரை சீலைகளை நன்றாக இழுத்து மூடிவிட்டு நித்திரைக்கு தயாரானார்கள் பயணிகள். தரையில் மிதக்கும் கப்பல் போல் வேகம் தெரியாதபடி பஸ் வேகம் பிடித்து ஓடி கொண்டிருந்தது. பஞ்சணையில் மஞ்சம் கொண்ட ஜோடிகள் தங்கள் விளையாட்டை தொடங்கினார்கள்.
நேத்து ராத்திரி எம்மா..
தூக்கம் போச்சுடி எம்மா...
என்ற கதையில் பக்கத்து படுக்கை பயணிகள் அந்த ராத்திரியில் தூக்கத்தை தொலைத்தார்கள். காரணம் 'அச்சாரத்தை போடு கச்சேரியை கேளு. சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு...' என்பதை போல் அவர்கள் ஆடிய விளையாட்டில் வெளிவந்த முணு முணுப்பு சத்தம் தான்...!
பொறுத்து பார்த்தவர்கள் பஸ் ஊழியர்களிடம் கூறி இருக்கிறார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்? அரைக்கதவை திறக்க முடியுமா? திரை சீலையை விலக்க முடியுமா?
அப்படி விலக்கி விவகாரத்தில் சிக்கிய ஊழியர்கள் பலர். 'யோவ், விவஸ்தை இருக்கா உனக்கு...? என்று கேட்பது மட்டுமல்ல சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சனைகளை கேட்டு ஆடிப்போய் இருக்கிறார்கள்.
நாங்கள் கணவன்-மனைவி, அல்லது காதலர்கள்... என்று எங்கள் தனியுரிமையில் தலையிட நீ யார்? கட்டணம் கொடுத்து தான் பயணிக்கிறோம். இந்த மாதிரி அநாகரீகமாக நடந்து கொண்டால் பஸ் உரிமையாளரிடம் புகார் செய்வோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
யார் அந்த பச்சைக்கிளி, செல்லக்கிளி என்று அடையாளம் கேட்கவா முடியுமா? எங்களை விட்டால் போதும் என்று ஊழியர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.
மறுநாள் காலையில் பஸ்சை சுத்தம் செய்யும்போது தான் ஆணுறைகள், காலி மது பாட்டில்கள் எல்லாம் கிடப்பதாகவும் கர்மம்.. கர்மம்... என்று தலையில் அடித்துக்கொண்டே அதை சுத்தம் செய்வதாகவும் கூறுகிறார்கள்.
அதே படுக்கை விரிப்பை மீண்டும் மாலை பயணத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதால் தினமும் வெளுக்க போடுகிறார்களாம்.
இந்த மாதிரி சம்பவங்கள் தொடர்பாக போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்து இருக்கிறது.
அப்போது, நாங்கள் பெரியவர்கள், எங்கள் சம்மதத்தோடு பயணிக்கிறோம். எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று எதிர்கேள்வி கேட்டு இருக்கிறார்கள். எனவே இது சட்ட விரோதமானது என்றோ அல்லது விபசாரம் என்றோ போலீசாரால் கூட நிரூபிக்க முடியாமல் போகிறது.
ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் உண்மையாக பயணிக்கும் பயணிகள். ஆனால் ஜிகு ஜிகு பஸ்சில் இப்படி ஜிம் ஜக் என்றவாறு பயணிக்கும் பயணிகளுக்கு (?!) இந்த கட்டணமெல்லாம் ஒரு ஜூஜூபி...!
புதிதாக உருவெடுத்து இருக்கும் இந்த தலைவலியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீசும் கையை பிசைகிறது.
விபசாரத்தில் தள்ளுவது, ஈடுபடுவது போன்ற ஒழுக்க கேடான செயல்களுக்கு தனித் தனி தண்டனை உள்ளது. ஆனால் நடக்கும் இடம், நடக்கும் விதம் எல்லாம் முற்றிலும் மாறுபாடாக இருப்பதால் எப்படி தடுப்பது? எப்படி சமாளிப்பது? என்பதே இப்போதைய கேள்வி.
- தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
- நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன.
இந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
அதிக விலைக்கு கட்டணத்தை உயர்த்தும் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பஸ் நிறுவனமும் பொருட்படுத்துவது இல்லை.
பண்டிகை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.
வழக்கமாக சென்னை பெருநகரத்தில் இருந்து பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை காலகட்டங்களின் போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுள்ளனர்.
பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ் நிறுவனத்தினர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.
சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பஸ்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில் இன்றும், நாளையும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.935 முதல் ரூ.3500 வரை என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.சி. அல்லாத சில பஸ்களில் இருக்கை கட்டணம் ரூ.900-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் நேரங்களுக்கு தகுந்தவாறு ஏ.சி. அல்லாத பஸ்களில் சென்னைக்கு செல்ல கட்டணமாக ரூ.1000 என வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஏ.சி. வசதியுடன் கூடிய பஸ்களில் இருக்கை கட்டணமாக ரூ.1,150,ரூ.1,400, ரூ.1,580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. சிலீப்பர் சீட்டுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,000, ரூ.2,100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை இதே பஸ்களில் சென்னை செல்வ தற்கு கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பஸ்களில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் ஏ.சி. சிலீப்பர் இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200, ரூ.2,300 ரூ.2,400, ரூ.2500, ரூ.2,800, ரூ.3,000, ரூ.3,400 வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
இதேபோல நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவட்டார் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1000-த்தில் இருந்து தொடங்கி ரூ.1250, ரூ.1300, ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் ஏ.சி.இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதலும், ஏ.சி. படுக்கை வசதிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல நெல்லையில் இருந்து கோவைக்கு செல்வதற்கு ஏ.சி.அல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.850, ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏ.சி.சிலீப்பர் சீட்டுகளுக்கு ரூ.1,139 முதல் ரூ.1200, ரூ.1341, ரூ.1500 என கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரணமான நாட்களில் நெல்லையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ. 650-ம், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ரூ.900 முதல் ரூ. 1,200 என்ற நிலையில் டிக்கெட்டுகள் வசூல் செய்யப்படும். ஆனால் இன்று குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.350 வரை உயர்ந்து ஒரு டிக்கெட் ரூ. 1000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர்ந்து காணப்படுகிறது.
இதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.
- பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
மூணாறில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் வந்தது. இதில் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் போடி ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது திடீரென பின் பக்க டயர் வெடித்து தீ பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதைப் பார்த்ததும் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
- தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பினனர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதையொட்டி பஸ் , ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர். அப்போது தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையம், ஓமலூர், வாழப்பாடி, நத்தக்கரை, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம், கூடுதல் நபர்களை ஏற்றி சென்றது உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கூறி 40 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
- பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
- ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
போரூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதாலும் அதன்பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் மற்றும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்த நிலையில் சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.
திருநெல்வேலிக்கு ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதேபோல் கோவை, மதுரைக்கு ரூ. 2 ஆயிரம், திருச்சிக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் விரைவான சொகுசு பயணம் என்பதால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
நாளை(வியாழக்கிழமை) சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 1500 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட உள்ளது.
இதில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு மூலம் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையே ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 7,154 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர்
- ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
சென்னை:
தீபாவளி, பொங்கல் மற்றும் விசேஷ நாட்களில் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணத்தை நிர்ணயிக்க முடியாத நிலையில் அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து அரசின் அனுமதியை பெற்றனர்.
வார நாட்களில் ஆம்னி பஸ்கள் காலியாக ஓடுவதாகவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இடங்கள் நிரம்புவதாகவும் இதனால் ஏற்படுகின்ற இழப்பை ஈடு செய்து கட்டணத்தை நிர்ணயித்தனர். ஏ.சி. இருக்கை, படுக்கை, ஏசி இல்லாத பஸ்களில் இருக்கை, படுக்கை என கட்டணங்களை பஸ்சின் வசதிக்கேற்ப நிர்ணயித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையொட்டி தேவை அதிகரித்து வருவதால் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். ஏற்கனவே கட்டணம் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் தேவையை அறிந்து மதுரை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு சில ஆம்னிபஸ் ஆபரேட்டர்கள் தாங்கள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு புஷ்பேக் இருக்கை கட்டணம் ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலித்தனர். தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தினர். படுக்கை கட்டணம் ரூ.1,500 ஆக இருந்தது. அவை ரூ.2000 ரூ.2,500 வரை வசூலிக்கிறார்கள். ஏ.சி. இருக்கை ரூ.1,800 முதல் ரூ.2000 வரை வசூலித்த நிலையில் தற்போது ரூ.3000 வரை வசூலிக்கின்றனர்.
ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.4000 வசூலிப்பதாக தென் மாவட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு அதை விட கூடுதலாக ரூ.4,500 வரை பெறப்படுகிறது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.3,140 ஆகும். கூடுதலாக 1000 ரூபாய் வசூலிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதே போல திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பஸ் ஆபரேட்டர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பண்டிகை காலங்களில் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆம்னி பஸ்களில் குடும்பமாக சென்றால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. விமான கட்டணத்திற்கு இணையாக ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பு, சோதனையை தீவிரப்படுத்தி பொதுமக்களிடம் பல மடங்கு கூடுதாக வசூலிக்கும் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
ஆம்னி பஸ்களில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வெளிப்படையாக நடக்கும் கட்டண கொள்ளையை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
இத்தகைய முறைகேட்டில் ஈடுபடும் பஸ்களை பறிமுதல் செய்வதோடு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.
- விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
சேலம்:
ஆங்கில புத்தாண்டையொட்டி ரெயில்கள், பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதையொட்டி சேலம் சரகத்துக்குட்பட்ட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தொப்பூர், ஓமலூர், மேட்டுப்பட்டி ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தினர்.
இந்த சோதனை கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. மொத்தம் 715 ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா?, அதிக பயணிகள் உள்ளார்களா?, சாலை வரி கட்டுப்பட்டுள்ளதா?, உரிமம் பெற்று இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், புத்தாண்டையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 78 பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வாகன சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
- ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும்.
- ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும்
சென்னை:
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அநியாய கட்டண வசூல் என்பது வாடிக்கையாக நடப்பதுதான்.
மக்கள் 4 நாள் சத்தம் போடுவார்கள். அதன் பிறகு அவர்களுடைய கவனம் திரும்பிவிடும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் தான் அதிகமாகவே இருக்கும். இப்போது அதே நிலைக்கு அதிகாரிகளும் வந்து விட்டது துரதிஷ்டம். என்ன தான் அரசியல்வாதிகள் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் நிர்வாகத்தை சீராகவும், முறையாகவும் நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம் தான் இருக்கிறது. ஆனால் இவர்களும் இப்போது அரசியல்வாதிகளை போலவே மாறிவிட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும். அது இரண்டு, 3 நாட்கள் பரபரப்பாக பேசப்படும். போக்குவரத்து துறை அதிகாரிகளும் அதிக கட்டணம் வசூலித்தால் பஸ் பறிமுதல் செய்யப்படும், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் பரபரப்பாக அறிவிப்பார்கள்.
இது ஒவ்வொரு பண்டிகைக்கும் நடக்கும். பண்டிகை முடிந்ததும் மறந்து போகும். இப்போதும் புத்தாண்டுக்காக ஊர் சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள். மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2500, நாகர்கோவிலில் இருந்து ரூ.3500 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதே நேரம் இதுபற்றி ஆம்னி பஸ் தரப்பில் கேட்டால் நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. இவ்வளவு கட்டணம் போட்டு இருக்கிறோம். விருப்பம் இருந்தால் வாருங்கள், விருப்பம் இல்லை என்றால் போங்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லுகிறார்கள்.
இந்த கட்டண உயர்வு என்பது ஏதோ ரகசியமாக அவர்கள் வசூலிக்கவில்லை. ஆன்லைன் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். வெளிப்படையாகவே தெரிகிறது. இது தெரிந்த பிறகும் அதிகாரிகளால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? இதற்காக பஸ்சில் சென்று சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை.
ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும். அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேபோல் இணைய தளத்திலும் அரசு நிர்ணயித்து இருக்கும் தொகை ஒவ்வொரு ஊருக்கும் இவ்வளவுதான். இதற்கு மேல் கட்டணங்களை வெளியிட்டால் அந்த இணைய தளமும் முடக்கப்படும் என்று அரசாங்கமும் எச்சரித்தால் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.
திருவிழாக்களில் மட்டும் திறக்கப்படும் திடீர் கடைகளை போல பண்டிகை காலங்களில் மட்டும் ஓட்டுகின்ற பஸ்களும் இருக்கின்றன. நிரந்தரமாக தினசரி சர்வீஸ் பஸ்களும் இருக்கின்றன. அவ்வாறு தினசரி ஓடுகின்ற பஸ்களில் நிரந்தரமாக ஒரு கட்டணத்தை வைத்துள்ளார்கள். அதே நேரம் திருவிழாவுக்காக ஓட்டுபவர்கள் மனம்போல் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். நேற்று புத்தாண்டு தினம்.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகமிக குறைவு. எனவே நேற்று ரூ.500 கட்டணத்தில் நாகர்கோவில் வரை இயக்கி இருக்கிறார்கள். இந்த பஸ்களில் இன்று அங்கிருந்து திரும்பி வர ரூ.3500 டிக்கெட் கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள். இந்த வாடிக்கையும் வேடிக்கையும் தொடர் கதைதான். ஆனால் மக்களை பற்றி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
கடமைக்காக அவ்வப்போது சில பஸ்கள் மீது வழக்கு போடுகிறார்கள். எல்லா ஆவணங்களும் இருந்தாலும், ஏதாவது ஒரு குறையை சொல்லி அபராதம் விதிப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அப்படியானால் தகுதி சான்றுகளையும் போக்குவரத்துறை அதிகாரிகள் தான் வழங்குகிறார்கள். அதே அதிகாரிகள் தான் பின்னர் குறையையும் சொல்கிறார்கள். தகுதி சான்றிதழ் வழங்கும்போது குறைகளை பார்க்காமல் விட்டது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் அதிகாரிகள் பாராமுகத்தால் இந்த வாடிக்கையும், வேடிக்கையும் நிரந்தரமாகிவிட்டது. இதனால் சிரமப்படுவது மக்கள்தான்.
- சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
- பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக செல்லும் ரெயில், சிறப்பு ரெயில் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன.
குறிப்பாக 12, 13, 14 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கு பஸ், ரெயில்களில் இடமில்லை. பொங்கல் பண்டிகை சனி, ஞாயிறு (13, 14-ந்தேதி) விடுமுறை நாட்களோடு சேர்ந்து 15-ந்தேதியும், அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், உழவர்தினம், 16, 17-ந்தேதி அரசு விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 3 நாட்களுக்கு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 50 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டதால் முன்பதிவுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்களை இணைத்து உள்ளனர்.
மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் தற்போது முன்பதிவு நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 35 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்துள்ளனர்.
விரைவில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை அமைச்சர் சிவசங்கர் வெளியிட இருப்பதால் அதற்கான முன்பதிவு தொடங்கும். இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்பவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதற்கான தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அங்கிருந்து இயக்கப்படுவதால் பயணிகள் பல பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்சார ரெயில்களில் பயணம் செய்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும்.
இது பயணிகளுக்கு புதிய அனுபவமாக இருப்பதால் சிரமப்படுகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்